52. வாயிலார் நாயனார்
தொ ண்டை நாட்டில் மயிலாப்பூரில் வேளாண் மரபில் வாயிலார் குடியில் தோன்றியவர் வாயிலார் நாயனார். சிவனடித்தொண்டில் ஆர்வமுடைய இப்பெருந் தகையார், மறவாமையால் அமைத்த மனக்கோயிலினுள்ளே இறைவனை எழுந்தருளச்செய்து ஆண்டான் அடிமை உறவினை யுணரவல்ல ஞானமாகிய திருவிளக்கினை ஏற்றி. அழியாத ஆனந்தமாகிய திருமஞ்சனம் ஆட்டி அன்பாகிய திருவமுதினைப் படைத்து வழி படுதலாகிய அகப்பூசையினை நெடுநாள்கள் வழுவாது செய்திருந்தார். பின்னர்ச் சிவபெருமான் திருவடி நீழற் கீழ்ச் சென்றடைந்தார்.