51. நின்றசீர் நெடுமாற நாயனார்

பாண்டி நாட்டிலே மதுரை மாநகரிலிருந்து ஆட்சிபுரிந்த கூன்பாண்டியன் சமண சமயத்தை மேற்கொண்டு, பின்னர்த் திருஞானசம்பந்தர் பாடியருளிய திருநீற்றுப்பதிகத்தால் வெப்புநோய் நீங்கிச் சைவ சமயத்தை மேற்கொண்டு கூன் நிமிர்ந்து நின்ற சீர் நெடுமாறன் ஆயினான் மங்கையர்க்கரசியார் கணவராகிய நின்றசீர் நெடுமாறர் வடபுலவேந்தரை நெல்வேலிப் போரில் வென்று வாகைமாலை புனைந்தார்: சிவபெருமானுக்குரிய திருத்தொண்டுகள் புரிந்து அருள்நெறி வளம் பெற நெடுங்காலம் அரசளித்த நின்றசீர் நெடுமாற நாயனார் இறைவர் அருளால் சிவலோகத்தினை எய்தி இன்புற்றார்.