50. காரிநாயனார்

திருக்கடவூரில் தோன்றிய காரியார். வண்தமிழின் துறையான பயன் தெரிந்து சொல் விளங்கிப் பொருள் உள்ளுறையாக மறையத் தம்பெயராற் காரிக்கோவை எனத் தமிழ்க்கோவை பாடித் தமிழ் மூவேந்தர்களிடமும் சென்று அவர்கள் மகிழும்படி அதற்குப் பொருள் விரித்துரைத்தார். வேந்தர்களிடம் பெற்றபொருளைக் கொண்டு சிவ பெருமானுக்குத் திருக்கோயில்கள் பல கட்டுவித்தார். மக்கள் மகிழச் செய்யுட்களின் சொற்பொருள் நயங்களை விளக்கி அவர்கள் தந்த பொருள்களைச் சிந்தையராய காரி நாயனார் சிவனருளால் வாய்ந்த மனம்போல் உடம்பும் வடகயிலைமலை சேர்ந்தார்.