49. கணம்புல்ல நாயனார்

வடவெள்ளாற்றுத் தென்கரையிலுள்ள இருக்கு வேளூர் என்னும் ஊரிலே தோன்றியவர். ‘எப்பொருளும் ஆவன ஈசர்கழல்’ எனக்கொண்ட பெருஞ்செல்வராகிய இவர், சிவபெருமான் திருக்கோயிலில் திருவிளக்கு எரிக்கும் பணியினை ஆர்வமுடன் செய்துவந்தார். வறுமையுற்ற இவர் தில்லைப்பதியை அடைந்து கணம்புல் என்ற புல்லை அறிந்து விற்று அப்பொருளைக் கொண்டு நெய் வாங்கித் திருப்புலீச்சரத் திருக்கோயிலில் திருவிளக்கு எரித்து வந்தார். கணம்புல்லை விற்று வந்மையால் கணம்புல்லர் என அழைக்கப் பெற்றார். ஒருநாள் கணம்புல் விற்கா தொழியத் திருக்கோயிலில் அந்தப் புல்லையே கொண்டு விளக்காக எரித்தார் அப்புல் விளக்கெரிக்கப் போதாமையால் அதனுடன் தமது முடியையும் சேர்த்து எரித்தார். அப்பொழுது சிவபெருமான் காட்சி கொடுத்தருள அம்முதல் வரை வணங்கிச் சிவலோகத்தை அடைந்தார்.