48. ஐயடிகள் காடவர்கோன் நாயனார்
காஞ்சி நகரத்திற் பல்லவர் குலத்தில் தோன்றித் தொண்டை நாட்டினை ஆண்ட இவ்வரசர் பெருமான் வடமொழி தென்மொழிகளில் வல்லவர். இவ்வுலகியல் வாழ்வு நிலையற்றதெனத் தெளித்து தமது அரச பதவியைத் துறந்து தில்லைச்சிற்றம்பலம் முதலிய திருத்தலங்களைப் பணிந்து ஒவ்வொரு வெண்பாவினாற் பாடிப் போற்றிச் சிவ பெருமான் திருவடியை அடைந்தார். இவர் பாடிய வெண்பாப்பனுவல் க்ஷேத்திரத் திருவெண்பா எனப் பதினோராந்திருமுறையிற் சேர்க்கப்பெற்றுள்ளது.