47. சத்தி நாயனார்

சோழநாட்டில் வரிஞ்சையூரில் வேளாண்மரபில் தோன்றியவர் இவர். சிவனடியார்களை யாரேனும் இகழ்ந்துரைப் பாராயின் அக்கொடியோரது நாக்கினை அறுத்தற்கென எப்பொழுது கையிற் சத்தி(கத்தி) யுடன் இருப்பவர் ஆதலால் சத்தியார் என அழைக்கப்பெற்றார். அடியார்களை அவமதித்துத் தீமொழி கூறுபவர் நாக்கினைக் குறட்டாற் பற்றியிழுத்துக் கையிலுள்ள கத்தியினால் அரிதலாகிய ஆண்மைத் திருப்பணியினை இவர் அன்பினோடு நெடுங்காலம் செய்திருந்து சிவபெருமான் திருவடியை அடைந்தார்.