2. தில்லைவாழந்தணர்

அருமறைகளை நன்குணர்ந்து தில்லைப்பதியில் வாழும் அந்தணர்களாகிய இவர்கள் தில்லைச்சிற்றம்பலத்தில் ஆடல் புரிந்தருளுரும் கூத்தப்பெமானுக்கு அகம் படித் தொண்டு புரியும் திருக்கூட்டத்தினராவர். திருவாரூர்ப்பெருமான் நம்பியாரூரராகிய சுந்தரர் திருத் தொண்டாத்தொகை பாடுதற்கு அடியெடுத்துக் கொடுத்தருளும்போது ‘தில்லைவாழந்தணர்தம் அடியார்க்கும் அடி யேன்’ என இத்திருக்கூட்டத்தாரையே முதற்கண் குறிப்பித் தருளிய திறத்தால் இவர்களது பெருமை நன்கு புலனாகும். மூவாயிரவராகிய இவர்கள் நீற்றினால் நிறைந்த கோலத்தினர்; நிருத்தனுக்கு உரிய தொண்டாம் பேற்றினை யுடையவர்கள்; இறைவன்பாற் பெருகிய அன்பினர்; நான் மறையோதி முத்தீ வேள்வி இயற்றிப் பொன்னம்பல நாதனை நாளும் வழிபடுவதனையே தம் செல்வமெனக் கொண்டவர்கள்.