34. சோமாசிமாற நாயனார்

சோழ நாட்டில் அரிசிலாற்றங்கரையிலுள்ள அம்பர் (அம்பல்) என்ற ஊரில் “நான்மறை வழியே வேள்வி” செய்யும் வேதியர் மரபில் தோன்றியவர் சோமாசி மாறர் வேள்விகள் பல செய்த இவர், சிவனடியார்களுக்கு அன்புடன் அமுதூட்டும் பணியினை ஆர்வமுடன் செய்பவர்! திருவைந்தெழுத்து ஓதும் நியமம் பூண்டவர்; திருவாரூரை அடைந்து சுந்தரமூர்த்தி நாயனாரின் திருவடிகளை அன்பினால் இடையறாது போற்றினார். இத்தகைய அன்பின் திறத்தால் சிவலோகத்தை யடைந்து பேரின்பம் உற்றார்.