18. உருத்திரபசுபதி நாயனார்
சோழ நாட்டில் திருத்தலையூரில் வேதியர் குலத்தில் தோன்றியவர் உருத்திரபசுபதி நாயனார். இவர் தாமரை மலர்கள் பூத்த தடாகத்திலே கழுத்தளவு நீரில் நின்றுகொண்டு சிவபெருமான் திருவடிகளைச் சிந்தித்துப் போற்றித் திருவைந்தெழுத்தையும் திருவுருத்திரத்தையும் இரவும் பகலும் வழுவாமல் செபித்து வழிபடுதலைத் தமது வழக்கமாகக் கொண்டிருந்தார். இத்தகைய மந்திர வழிபாட்டின் பயனாகச் சிவபெருமான் திருவருளுக்கு உரியராய்ச் சிவலோகத்தையடைந்து பேரின்பம் பெற்றார்.