12. பாராயணப் பாடல்கள்
திருமுருகப்பெருமானின் திருவருளைப்பெற்று உய்யும் பொருட்டுப் பக்திப் பாடல்கள் பாடிய புலவர் பலர். பாரா யணத்திற்குரிய முறையில் அமைந்துள்ள சில பாடல்கள் ஈண்டுத் தரப்படுகின்றன.
“எவரா யிருப்பினும் கார்த்திகேயனிடத்தில் பக்தி பண்ணு பவர் புதல்வன் முதலிய பல பேறுகளைப் பெறுவர்” என்று வால்மீகி இராமாயணத்தின் பாலகாண்டத்தில் விசுவா மித்திரர் வாக்காக வியாசர் குறிப்பிடுகின்றார். எனவே பின் வரும் பாடல்களை மனனம் செய்து அன்பர்கள் திரு முருகன் திருவருள் பெற்றுய்வார்களாக.
நாள்தோறும் பாராயணம் செய்தற்குரிய- திருமுருகாற்றுப்படையின் அடியிற் காணும் வெண்பாக்கள்
குன்றம் எறிந்தாய் குரைகடலில் சூர்தடிந்தாய்
புன்தலைய பூதப் பொருபடையாய் – என்றும்
இளையாய் அழகியாய் ஏறூர்ந்தான் ஏறே
உளையாய்என் உள்ளத் துறை 1
குன்றம் எறிந்ததுவும் குன்றப்போர் செய்ததுவும்
அன்றங் கமரரிடர் தீர்த்ததுவும் – இன்றென்னைக்
கைவிடா நின்றதுவும் கற்பொதும்பில் காத்ததுவும்
மெய்விடா வீரன்கை வேல். 2
வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறைமீட்ட
தீரவேல் செவ்வேள் திருக்கைவேல் – வாரி
குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும்
துளைத்தவேல் உண்டே துணை. 3
இன்னம் ஒருகால் எனதிடும்பைக் குன்றுக்குக்
கொன்னவில்வேற் சூர்தடிந்த கொற்றவா – முன்னம்
பனிவேய் நெடுங்குன்றம் பட்டுருவத் தொட்ட
தனிவேலை வாங்கத் தகும். 4
உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன்
பின்னை ஒருவரையான் பின்செல்லேன் – பன்னிருகைக்
கோலப்பா வானோர் கொடியவினை தீர்த்தருளும்
வேலப்பா செந்திவாழ் வே. 5
அஞ்சு முகும்தோன்றில் ஆறு முகம்தோன்றும்
வெஞ்ச மரில்அஞ்சல்என் வேல்தோன்றும் – நெஞ்சில்
ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும்
முருகாஎன் றோதுவார் முன். 6
முருகனே செந்தி முதல்வனே மாயோன்
மருகனே ஈசன் மகனே – ஒருகைமுகன்
தம்பியே நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும்
நம்பியே கைதொழுவேன் நான். 7
காக்கக் கடவியநீ காவா திருத்தக்கால்
ஆர்க்குப் பரமாம் அறுமுகவா – பூக்கும்
கடம்பா முருகா கதிர்வேலா நல்ல
இடங்காண் இரங்காய் இனி. 8
பரங்குன்றிற் பன்னிருகைக் கோமான்தன் பாதம்
கரங்கூப்பிக் கண்குளிரக் கண்டு – சுருங்காமல்
ஆசையால் நெஞ்சே அணிமுருகாற் றுப்படையைப்
பூசையாக் கொண்டே புகல். 9
நக்கீரர் தாமுரைத்த நன்முருகாற் றுப்படையைத்
தற்கோல நாள்தோறும் சாற்றினால் – முற்கோல
மாமுருகன் வந்து மனக்கவலை தீர்த்தருளித்
தான்நினைத்த எல்லாம் தரும். 10
திருமுருகாற்றுப்படையை நாடோறும் ஓதும் அடியார்கள் மேற்கண்ட வெண்பாக்களோடு கீழ்க்காணும். கட்டளைக் கலித்துறையினையும் ஓதுவர்:
ஒருமுரு காவென்றன் உள்ளங் குளிர உவந்துடனே
வருமுரு காவென்று வாய்வெரு வாநிற்பக் கையிங்ஙனே
தருமுருகாவென்று தான்புலம் பாநிற்பத் தையன்முன்னே
திருமுரு காற்றுப் படையுட னேவருஞ் சேவகனே.
அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி அயனென வாகி
அரியென வாகி அரனென வாகி அகமாகி அவர்மேலாய்
இகரமு மாகி யெவைகளு மாகி
யினிமையு மாகி வருவோ [னே
இருநில மீதி லெளியனும் வாழ
எனதுமு னோடி [வரவேணும்
மகபதி யாகி மருவும்வ லாரி மகிழ்களி கூரும் வடிவோனே
வனமுறை வேட னருளிய பூஜை
மகிழ்கதிர் காம முடையோனே
செக்கண சேகு தகுதிமி தோதி திமியென ஆடுமயிலோ
திருமலி வான பழமுதிர் சோலை [னே
மலைமிசை மேவு
பெருமாளே.
– திருப்புகழ்
சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு
வெற்பனைச் செஞ்சுடர்வேல்
வேந்தனைச் செந்தமிழ் நூல்விரித்
தோனை விளங்கு வள்ளி
காந்தனைக் கந்தக் கடம்பனைக்
கார்மயில் வாகனனைச்
சாந்துணைப் போது மறவா
தவர்க்கொரு தாழ்வில்லையே.
-கந்தர் அலங்காரம்
பிறந்திறந் துழலும் பெருவியா தியையும்
பெரும்பசி நோய்ச்சுடத் தளர்ந்து
நிறங்குலைந் தொருவர் பின்றிரிந் துழலு
நிரப்பெனுங் குறுவியா தியையுந்
திறந்தருள் கடைக்கட் பார்வையா மருந்தால்
தீர்த்தருள் புரியுநாள் உளதோ
அறம்பொரு ளின்பம் வீடருள் தணிகை
ஆறுமா முகதயா நிதியே.
-கந்தப்ப தேசிகர்
உருகா மனமுஞ் சிவஞான முணரா வறிவு முனதுபுகழ்
ஓதா நாவு மோதக்கேட் டுவந்தே யினிய நதிபோலப்
பெருகா விழியு முடையேனைப் பிறவிக் கடலில் வீழாமற்
பேணியெடுத்திங் கெனதுள்ளம் பிரியா விரிஞ்சைப் [பதிவாழு
முருகா வருக சதுர்வேத முதல்வா வருக வினைதீர்க்கு
முனைவா வருக மலராறு முகவா வருக திருமாலின்
மருகா வருக மயிலேறு மன்னா வருக அடியார்கள்
வாழ்வே வருக தெய்வசிகா மணியே வருக வருகவே.
-மார்க்கசகாய தேவர்.
அந்திப்போது அழகுறவே நடித்தருளும்
விழித்துணைவர் அருளும் கோவை
வந்திப்போர் நினைத்தபடி மயில்ஏறி
அயிலெடுத்து வரும்செவ் வேளைச்
சிந்திப்போம் புகழ்ந்திடுவோம் மலரணிவோம்
அவர்கமலத் தாளும் தோளும்
சிந்திப்போம் ஆதலினால் நமதுபழ
வினைகளெல்லாம் சிந்திப் போமே.
– திருவிரிஞ்சைப் புராணம்
அறுசமயக் கடவுள் வேறு வேறின்றுயான் ஒருவனே அங்கங்கிருந்து
அன்பர்க்கு முத்திதரு வித்தென் றியாவர்க்கும் அறிவித்த வதனமணியே.
-திருப்போரூர் சிதம்பர சுவாமிகள்
ஓகையாற் றிரைமுன் னாளில்
வழக்குமா வினையும் வாட்டும்
ஏகவெவ் வரையின் எல்லை
பிடித்திடும் இமையோர் போற்றத்
தோகைமேல் உலவும் கந்தன்
சுடர்க்கரத் திருக்கும் வெற்றி
வாகையே சுமக்கும் வேலை
வணங்குவ தெமக்கு வேலை.
– சைவ எல்லப்ப நாவலர்: செவ்வந்திப் புராணம்:
காலன் செங்கட் கடாவினி லேறிய
கயிறு வீசிப் பிடியா முனனெளை
வெறுஞ் செங்கையி லேந்தி மயில்மிசை
விரைவில் வந்துவந் தஞ்சலென் றருள்வாய்
ஆல முண்ட களத்த ரிடத்துறை
அரிவை கொஞ்சுறக் கொஞ்சுபைங் கிள்ளையே
தாலம் பாளை மதுக்குட மேந்திய
சமர மாபுரிச் சண்முக வேலனே.
– சிதம்பர சுவாமிகள்
உயிர்ப்பிணி தவிர்க்கு மருத்துவன் என்கோ
உடற்பிணிக் கொருமருந்து என்கோ
மயக்குறு மனத்தி னினைவெனும் பனியை
மாற்றிய கதிரவன் என்கோ
வியப்புறு புரண சொருபதின் னருளை
வினையனே னேதெனப் புகல்கேன்
கயத்துரி தரித்தோன் புதல்வனே போரூர்க்
காங்கெயா தேங்கொளி மணியே.
– சிதம்பர சுவாமிகள்.